தர்மபுரி மாவட்டம் ,அரூர் வட்டம் ,சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மற்றும் விமலாதேவி இவர்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.. இவர்கள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தனர்.. தற்போது இயற்கை விவசாயம் மேல் உள்ள ஆர்வத்தில் 2018ஆம் ஆண்டு முதல் 60 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்..
நாங்க சிங்கப்பூர்
வாழ்க்கை வேணான்னு சொல்லிட்டு எங்க சொந்த ஊர் வரும்போது இங்கே 60 ஏக்கர் முழுவதும்
தரிசாக இருந்துச்சு அத நாங்க சீர்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதற்கான பூமியான நாங்க
மாத்தினோங்க….
இப்ப 60 ஏக்கர்ல
மா, பாக்கு மற்றும் தேக்கு கூடவே ஊடுபயிராக வாழை போன்ற பயிர்களை இயற்கை விவசாயம் பண்றோம்.
இயற்கை விவசாயம் செய்ய தேவையான உரங்களுக்கு எங்கிட்ட கால்நடைகள் இருக்குங்க... இப்ப
50 ஆடுகள் , 14 நாட்டு மாடுகள் அப்புறம் 50க்கு மேல நாட்டு கோழிகள் எங்க பண்ணையில வளர்க்கிறோங்க.....
இதிலிருந்து வர கழிவுகள இயற்கை விவசாயத்துக்கு நாங்க பயன்படுத்துகிறோம்... இதனால எங்களுக்கு
உரம் வாங்கிற செலவு மிச்சம்
எங்கள் பண்ணையில்
விளைகிற பொருட்கள் சந்தை விலையை விட பத்து ரூபா சேர்த்து கொடுப்பாங்க அந்த அளவுக்கு
இயற்கையாக இருக்கும் அதனால வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்..
மேலும் தெரிந்து
கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..