மாதம் ரூ.3000 விவசாயிகளுக்கு பென்சன் | 18 வயது 40 வரை உள்ளோர் இந்த திட்டத்தில் இனையலாம் PMKMY Pension Scheme

வணக்கம் 

மத்திய அரசு மாதம் 3000 விவசாயிகளுக்கு வழங்கும் பென்ஷன் திட்டம் சென்ற மாதம் அறிமுகப்படுத்தியது.



Registration For Pradhan Mantri Kisan Mandhan Yojana 





விவசாயிகள் 60 வயது நிறைந்தவுடன் மாதம் ஓய்வு வழங்கும் திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து திட்டத்திற்கான பதிவு தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தில் விவசாயிகளை இணைக்கும் பொறுப்பை Common Service Centre)  e-governance சர்வீஸ் இந்தியாவிடம் ஒப்படைத்தது. இந்த நிறுவனம்தான் நாட்டின் 3.5 லட்சம் பொது சேவை மையங்களை நிர்வகித்து வருகிறது. ஆகையால் இந்த திட்டத்தில் விவசாயிகளை  வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள்  2 கோடி விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இணைவது எப்படி ??


இந்தத் திட்டத்தில் விவசாயிகள் இணைவது மிகவும் சுலபம். தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி தங்கள்
1)ஆதார் கார்டு
2)வங்கி பாஸ்புக் அல்லது
3)வங்கிக் கணக்கு
விவரங்களை அளிக்கலாம்.  பொது சேவை மைய அதிகாரி ஆன்லைன் மூலம் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்து கொள்வார் அதன் பின் அனைத்து விதமான விசாரணைகளில் முடிந்த பின் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு பென்சன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் படி 60 வயதை எட்டியவர்கள் மாதம் 3,000 ரூபாய் பெறலாம்.

தகுதியானவர்கள் யார் ??

2 ஹெக்டர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயி திட்டத்தில் சேரலாம் இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள விவசாயிகள் இணைய முடியும் ஒரு விவசாயி குறைந்தபட்சம் 55 முதல் 200 வரை மாதந்தோறும் பங்களிக்கலாம்.விவசாயி அளிக்கும் பங்களிப்புக்கு இணையாக மத்திய அரசின் பங்களிப்பு செய்யும்.

மேலும் விவசாயி திட்டத்தில் சேருவது போல அவரின் மனைவியும் தனியாக ஓய்வு பெற தகுதியானவர் ஒருவேளை விவசாய ஓய்வு தேதிக்கு முன்பாக இறந்துவிட்டால் அந்த திட்டத்தை அவரின் மனைவி தொடரலாம் ஒருவேளை மனைவி அந்த திட்டத்தை தொடர விருப்பம் இல்லாவிட்டாலும் சரி செலுத்திய ஒட்டு மொத்த தொகை வட்டியுடன் அவர் மனைவிக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.









Previous Post Next Post

Contact Form